கரூரில்,"விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு"மாறுவேட போட்டி நடைபெற்றது.

கரூரில்,"விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு"மாறுவேட போட்டி நடைபெற்றது.;

Update: 2026-01-20 10:57 GMT
கரூரில்,"விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு"மாறுவேட போட்டி நடைபெற்றது. அரசு அருங்காட்சியகம் கரூர் சார்பாக  குடியரசு  தினத்தை முன்னிட்டு 3 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரையுள்ள  பள்ளி மாணவர்களுக்கு  – “ விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு” என்ற தலைப்பில் மாறுவேடப் போட்டி இன்று   நடைபெற்றது. இவ்விழாவிற்கு, கரூர்  மாவட்டத்தில் உள்ள  பள்ளிகளிலிருந்து சுமார் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களைப் போல் வேடங்களை தரித்து சிறப்பான முறையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.  போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு பரிசுப் பொருட்களும், பங்கு பெற்ற அனைத்து மாணவ – மாணவிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில்  சுமார் 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.  இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை அருங்காட்சியக காப்பாட்சியர்  சாய் ஷங்கர்  செய்திருந்தார்.

Similar News