கரூரில் சிறப்பு வரைவு வாக்காளர் பதவி பட்டியல் குறித்து ஆய்வு கூட்டம்.
கரூரில் சிறப்பு வரைவு வாக்காளர் பதவி பட்டியல் குறித்து ஆய்வு கூட்டம்.;
கரூரில் சிறப்பு வரைவு வாக்காளர் பதவி பட்டியல் குறித்து ஆய்வு கூட்டம். கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கரூர் மாவட்ட சிறப்பு வரைவு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குனர் கோவிந்தராஜ் தலைமையில், கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான தங்கவேல் முன்னிலையில் உதவி வாக்குப்பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு வரைவு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கோவிந்தராஜ் தெரிவிக்கும்போது, இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணையின்படி கரூர் மாவட்டத்தில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கரூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர்களை சேர்க்க படிவம் ஆறு, முகவரி மாற்றம் திருத்தங்கள் செய்ய படிவம் 8, வேறு இடத்தில் ஓட்டு இருந்தால் அதை நீக்குவதற்கு படிவம் 7 ஆகியவற்றை வழங்குவதற்கு நான்கு நாட்கள் அனைத்து வாக்கு சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. முகாம்களில் பெறப்பட்ட படிவங்கள் தொடர்புடைய அலுவலர்கள் மூலம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மேலும் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் குளித்தலை சார் ஆட்சியர் சுவாதி, கரூர் வருவாய் கோட்டாட்சியர் முகமது பைசல், கலால் துறை உதவி ஆணையர் முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார், வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.