சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட சத்துணவு ஊழியர்கள் கைது.
காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட சத்துணவு ஊழியர்கள் கைது.;
By : NAMAKKAL KING 24X7 B
Update: 2026-01-20 12:31 GMT
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் 2021 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி அறிக்கை வரிசையில் 313 இல் குறிப்பிட்ட உள்ளவாறு சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை அமைப்பாளர்களுக்கு 5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு 3 லட்சம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் முழக்கங்களை எழுப்பியவாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் அனைவரையும் நாமக்கல் ஏ.எஸ்.பி ஆகாஷ் ஜோஷி தலைமையில் போலீசார் கைது செய்து நாமக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்