புதிதாக கட்டி தர வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை.
திருமயம் அருகே சிதிலமடைந்த நிலையில் காணப்படும் தவசுமலை விளக்கு, அம்மினிப்பட்டி பேருந்து நிருத்தத்தை புதிதாக கட்டி தர வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை.;
திருமயம் அருகே சிதிலமடைந்த நிலையில் காணப்படும் தவசுமலை விளக்கு, அம்மினிப்பட்டி பேருந்து நிருத்தத்தை புதிதாக கட்டி தர வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை. புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே தவசு மலை விளக்கு, அம்மினிப்பட்டி பேருந்து நிறுத்தம் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிருத்ததிற்கு வந்து இளைப்பாரும் அம்மினிப்பட்டி, உலகினிப்பட்டி, தத்தமுத்துபட்டி, தவசுமலை, வண்ணாரபட்டி உள்ளிட்ட கிராம மக்கள் இந்த நிழற்குடைய பயன்படுத்தி வந்த நிலையில் தற்பொழுது இந்த பேருந்து நிறுத்தமானது சுமார் 20 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்டதாகும். ஆகவே மிகவும் மோசமான நிலையில் இடிந்து சிதிலமடைந்து காணப்பட்டு வருகிறது. இதனால் மழைக்காலம் மற்றும் வெயில் காலங்களில் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியர்கள், அன்றாட வேலைக்குச் செல்பவர்கள், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே இது சம்பந்தப்பட்ட துறை பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு புதிய பேருந்து நிலையம் கட்டித் தர வேண்டி அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.