ராமநாதபுரம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது
விடுதலைப் போராட்ட வீரரும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 129வது பிறந்தநாள் விழாகொண்டாடும் நடைபெற்றது;
விடுதலைப் போராட்ட வீரரும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 129வது பிறந்தநாள் விழாவினை கொண்டாடும் விதமாக அக்கட்சியின் மாவட்ட செயலாளர் L.லெட்சுமணன் முன்னிலையிலும் மாவட்ட துணைச் செயலாளர் வீர.ந.தினேஷ் அவர்களின் ஏற்பாட்டிலும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் மாநில இளைஞர் அணி செயலாளர் சப்பாணி முருகன் அவர்கள் இராம்நாடு நகரில் மறவர் கொத்த தெருவில் அமைந்துள்ள தேவர் திருமகனார் திருக்கோவிலில் மரியாதை செலுத்தி கட்சியின் கொடியை ஏற்றி நேதாஜி அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.பின் மறவர் தெரு அருகில் இருக்கும் இராமனுஜம் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் நோட்புத்தகம் பேனா உள்ளிட்ட 5 கல்வி உபகரணங்கள் வழங்கி வாழ்த்து கூறினார். பின் அதன் தொடர்ச்சியாக பசும்பொன் நகரில் நேதாஜி திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் பேனா வழங்கி வாழ்த்து கூறினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலைக்கு அவரின் நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட தொழிற்சஙக செயலாளர் வாசுதேவன், தலைவர் அஜித் குமார், இளைஞர் அணி அமைப்பாளர் செல்ல பாண்டி துணை அமைப்பாளர் ஆதி., நகர் மாணவரணி நிர்வாகிகள் பூமணி, சஞ்சய், மணிகண்டன் மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.