திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரருக்கு மூன்று கோடி ரூபாய் செலவில் அமைக்கப் பட்ட புதிய தேர் வெள்ளோட்டம்

திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வரருக்கு மூன்று கோடி ரூபாய் செலவில் அமைக்கப் பட்ட புதிய தேர் வெள்ளோட்டம்.திருச்செங்கோடு எம் எல் ஏ ஈஸ்வரன் திமுக மாவட்ட செயலாளர் கே எஸ் மூர்த்திதிருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு உள்ளிட்ட பலர் தேரை வடம் பிடித்துவெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தனர்;

Update: 2026-01-25 15:39 GMT
பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் வைகாசி விசாக தேர் திருவிழாவின் போது அர்த்தநாரீஸ்வரர் வலம் வர சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட தமிழகத்தின் நான்காவது பெரிய தேராக விளங்குகிற வைகாசி விசாகத் திருவிழா பெரிய தேர் காலத்தால் பழமை அடைந்த தால் புதிதாக தேர் அமைக்க முடிவு செய்யப்பட்டுசுமார் மூன்று கோடி மதிப்பீட்டில்100 டன் இலுப்பை வேம்புஉள்ளிட்ட மரங்களைக் கொண்டு 23 அடி உயரம் 23 அடி அகலம்கொண்ட இரும்பு அச்சு உடன் கூடிய புதிய தேர் உருவாக்கும் பணிகடந்த 24 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பனிரெண்டாம் தேதி துவக்கப்பட்டு பணிகள் முடிவடைந்து புதிய தேர் உருவாகி இரும்பு அச்சு இரும்பு சக்கரம் பொருத்தப்பட்டு முழு வடிவம் பெற்றது. கடந்த ஓராண்டாக இந்த தேர் வடிவமைக்கப்பட்டு வந்த நிலையில் தேரின் வடிவமைப்பு நிறைவடைந்து இன்று வெள்ளோட்டம் விடப்பட்டது. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் இருக்கும் அஸ்திர தேவர் திருமூர்த்தியை தேரில் ஏற்றி வெள்ளோட்ட நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டது. திருச்செங்கோடு கைலாசநாதர் கோயிலில் இருந்து புறப்பட்டஅஸ்திரத் தேவர்ஊர்வலம் தேரை வந்தடைந்தது திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினரும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பரமத்தி வேலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே எஸ் மூர்த்திதிருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு உள்ளிட்ட பலர் தேரின் வடத்தை பிடித்து இழுத்து வெள்ளோட்டத்தை தொடங்கி வைத்தனர். தேர் நிலையில் இருந்து தொடங்கி கிழக்கு ரத வீதி மேற்கு ரத வீதி தெற்கு ரத வீதி வடக்கு ரத வீதி வழியாக மீண்டும் தேர் நிலையை அடைந்தது. இந்த வெள்ளோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம், உள்ளிட்ட பல்வேறு கிராமிய நிகழ்ச்சிகளுடன் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருச்செங்கோடுகோவில் செயல் அலுவலர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமணி காந்தன் அர்த்தநாரீஸ்வரர் கோயில் அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து திருச்செங்கோடு திமுக மேற்குநகர செயலாளர் நடேசன்,கிழக்கு நகர செயலாளர் கார்த்திகேயன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில் திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Similar News