கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்ற வரும் நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் பேசியிருப்பது இன்புளூயன்ஸ் செய்கிறார்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது தவெக அருண்ராஜ் பேட்டி
கரூர் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்ற வரும் நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் பேசியிருப்பது இன்புளூயன்ஸ் செய்கிறார்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது இதைக் காட்டி எங்களை மிரட்ட முடியாது மிரட்ட முயற்சிக்கிறார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம்தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் பேட்டி;
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் 2026 தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் என கருதப்படும் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ்திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில்மனைவி மகன் மற்றும் உறவினர்கள் கட்சியினர் என குடும்பத்தினருடன்வந்து சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கருவேப்பம்பட்டி பகுதியில் கேம் டவுன் டர்ப் மைதானத்தில் நடைபெற்ற 60 அணிகள் கலந்து கொண்ட 2 நாள் நடந்த டென்னிஸ் பால் டர்ப் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார். நாகவுட் முறையில் நடந்த இந்த போட்டிகளில் ஏழு பேர் கொண்ட அணிகள் ஐந்து ஓவர்போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றனர். முதல் பரிசினை நாராயண பாளையம் ஸ்டார் பாய்ஸ் அணியினரும் இரண்டாம் பரிசினை டி.கே பாய்ஸ் தொண்டிக்கரடு அணியினரும் மூன்றாம் பரிசினைகூட்டப்பள்ளி கே எஸ் எம் சி சி அணியினரும் பெற்றனர் வெற்றி பெற்ற அணிகளுக்குவெற்றிக் கோப்பைகள் மற்றும் முதல் பரிசாக 20ஆயிரம் இரண்டாம் பரிசாக15000 மூன்றாம் பரிசாக பத்தாயிரம் வழங்கினார்.குடியரசு தினத்தை ஒட்டி இரண்டு நாள் டர்ப் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இன்று நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் தவெக சார்பில் விசில் சின்னத்தை அறிமுகப்படுத்த நடந்த காட்சி கிரிக்கெட் போட்டியில் அருண் ராஜ் தலைமையில் விசில் அணியும் நடிகரும் இயக்குனரும் ஆன ஸ்ரீநாத் தலைமையில் பிகில் அணியும் கிரிக்கெட் விளையாடினர் இதில்பிகில் அணி வெற்றி பெற்றது. முன்னதாகமைதானத்திற்கு வந்த அருண்ராஜுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போதுதமிழக வெற்றிக்கழக தொண்டர் சங்ககிரிபுள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தனது தாத்தா காலத்தில் 1884 இல் வெள்ளைக்கார நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட 130 ஆண்டுகள் பழமை வாய்ந்த விசில் ஒன்றைபரிசளித்தார் பல ஆண்டுகளாக வைத்திருந்த அந்த விசிலை விஜயின் சின்னம் என்பதால் அருண் ராஜ் இடம் பரிசளித்து இருப்பதாக பழனிச்சாமி தெரிவித்தார். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசியஅருண் ராஜ் கூறியதாவது கரூர் சம்பவம் குறித்துசிபிஐ விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியிருப்பது அவர்கள் இந்த விஷயத்தில் இன்புளுயன்ஸ் செய்கிறார்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது என கூறினார் இதை வைத்து உங்களை மிரட்டுகிறார்கள் என கருதலாமா என செய்தியாளர்கள் கேட்டபோது மிரட்ட முயற்சிக்கிறார்கள் என கருதலாம் என கூறினார் அதிமுக தங்களைக் கடுமையாக விமர்சிக்கிறது எனக் கூறிய போது எங்களுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி களத்தில் உள்ளவர்களோடு தான் நாங்கள் போட்டியிட முடியும் முடியும்களத்தில் இல்லாதவர்கள் சொல்வதற்கெல்லாம் கவலை கொள்ள முடியாது எனக் கூறினார் மேலும் டிடிவி தினகரன் விஜய் க குறித்து விமர்சிக்கிறாரேஎன கேட்டபோது அவர் முன்பு என்ன பேசினார்? இப்போது என்ன பேசுகிறார் என்பதை எல்லாம் நீங்களே தான் பார்க்க வேண்டும் என கூறினார் சட்டமன்றத்தில் செல்வப் பெருந்தகை விசில்சத்தம் பறக்கிறது எனக் கூறுகிறாரேகூட்டணிக்கு வருகிற சிக்னல் என்று கொள்ளலாமா எனசெய்தியாளர்கள் கேட்டபோது போ பொறுத்திருந்து பாருங்கள் எனக் கூறினார்திருச்சி காங்கிரஸில் இருந்து பெருந்தலைவர்கள்தமிழக வெற்றி கழகத்தில் இணை உள்ளதாக செய்திகள் பரவுகிறதே எனக் கேட்டபோது இணைந்தால் நல்லது தான் உங்களுக்கு தெரியாமல் நடக்கவா போகிறது நடக்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என சிரித்தபடி கூறினார்.நல்ல ஒரு நிகழ்ச்சியின் போது திருச்செங்கோடு ஒன்றிய நகரதமிழக வெற்றி கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர் அணியினர் என பலரும் கலந்து கொண்டனர்.