மமக சார்பில் சாலை மறியல் போராட்டம்
செய்யாரில் மனிதநேய மக்கள் கட்சியினரை கைது செய்ததை கண்டித்து ஆரணி மணிகூண்டு அருகில் மனிதநேய மக்கள் கட்சியினர் சாலை மறியல் செய்தனர்.;
ஆரணி, செய்யாரில் மனிதநேய மக்கள் கட்சியினரை கைது செய்ததை கண்டித்து ஆரணி மணிகூண்டு அருகில் மனிதநேய மக்கள் கட்சியினர் சாலை மறியல் செய்ததில் 25 பேரை நகர போலீஸார் கைது செய்தனர். செய்யார் பஜார் வீதியில் பொதுமக்களுக்கு இடையூராக அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நீண்ட நாட்களாக நடைப்பெற்ற போராட்டத்தின் தொடர்ச்சியாக செய்யாறில் மனிதநேய மக்கள் கட்சியின் அறவழி உண்ணாவிரத போராட்டம் மாவட்ட தலைவர்... எச்.ஜமால் தலைமையில் நடைப்பெற்றது. இதில் செய்யாறு மாவட்ட நகர நிர்வாகிகள் கைது செய்ததைக் கண்டித்து ஆரணியில் மனிதநேய மக்கள் கட்சியின் நகர தலைவர் ஜீலான் தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியின் நகர செயலாளர் ஆதம், தமுமுக நகர செயலாளர் அமீன், நகர துணை தலைவர் ஆரீப்பேக் உட்பட நகர நிர்வாகிகள் 25 க்கும் மேற்ப்பட்டோர் பெருந்திராளாக கலந்துக்கொண்டு செய்யாறு நகர காவல்துறையை கண்டித்து ஆரணி முக்கிய சாலையான மணிகூண்டு அருகில் சாலைமறியலில் ஈடுபட்டு ஆரணி காவல்துறையால் கைது செய்யப்பட்டனா்.