நாமக்கல்லில் கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம்!
நாமக்கல் மாவட்டத்தில், 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.;
நாமக்கல்லில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் (ஜனவரி -28, புதன்கிழமை) தொடங்கியது. 300-க்கும் மேற்பட்டோர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாமக்கல்- மோகனூர் சாலையில் உள்ள வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்டத் தலைவர் எஸ்.முருகேசன் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர்கள் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 நாட்கள் நடைபெறும் இந்த காத்திருப்பு போராட்டத்தில், தங்களின் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க நிர்வாகிகள் பேசினர். இதில், தமிழகத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகங்களையும் குடிநீர், இணையம்,கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் நவீனமயமாக்கம் செய்ய வேண்டும்.,கிராம நிர்வாக அலுவலர்கள் டிஎன்பிஎஸ்சி நேரடி நியமன முறையில் கல்வித் தகுதியை பட்டப் படிப்பு என மாற்றி அமைக்க வேண்டும்.,10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு தேர்வுநிலை நிர்வாக கிராம நிர்வாக அலுவலர் எனவும், 20 ஆண்டு பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிறப்புநிலை கிராம நிர்வாக அலுவலர் எனவும் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்., கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப கிராம நிர்வாக அலுவலர்களின் பதவி உயர்வில் 30 லிருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டும்., கிராம நிர்வாக அலுவலர்களின் பதவி உயர்வு காலவரம்பை 6 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைத்து அரசாணை வெளியிட வேண்டும்.,தேர்வுநிலை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் ஊதியமும், சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு துணை வட்டாட்சியர் நிலையில் ஊதியமும் வழங்க வேண்டும்.,நில புல (TSLR-Town Survey Land Register) பட்டா மாறுதலில் கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரை பெற வருவாய்-பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், இதுநாள் வரை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல், இராசிபுரம் சேந்தமங்கலம், கொல்லிமலை, மோகனூர், பரமத்தி, திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய எட்டு வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பும் 300-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கள் பணிகளை புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் கிராம நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டன.நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தொடர் காத்திருப்பு போராட்டத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.லட்சுமி நரசிம்மன், வட்ட துணை செயலாளர்கள் எஸ். சுகுமார்,கே.பூபதி, பொருளாளர் எஸ்.குமார், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.