திருச்செங்கோடு அருள்மிகு பெரிய ஓங்காளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா

திருச்செங்கோடு அருள்மிகு பெரிய ஓங்காளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா 50 ஆண்டுகளுக்குப் பின் நடந்த கும்பாபிஷேக விழா என்பதால் பல்லாயிரக் கணக்கில் பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம்;

Update: 2026-01-28 16:47 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு சினம் தீர்த்த விநாயகர் அருள்மிகு பெரிய ஓங்காளி அம்மன் அருள்மிகு மகா முனியப்ப சுவாமிகள் மற்றும் பரிவார மூர்த்திகள்எழுந்தருளி உள்ள பெரிய ஓங்காளியம்மன் கோவில் ஆலயத்தில் சுற்றுச்சூழல் நான்கு புற நுழைவு வாயில்கள் பரிவார தெய்வங்கள் துவார சக்திகள் முனியப்ப சாமிகள் ஆகியவை திருப்பணிகள் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கும்பாபிஷேக விழா இன்று காலை 9:30 மணிக்குதொடங்கி 10:30 மணி வரை நடைபெற்றது.கடந்த இருபதாம் தேதி விநாயகர் பூஜை மகா சங்கல்பம் அம்பாலின் அனுமதி பெறுதல் குலதெய்வ பிரார்த்தனை முனியப்பசாமிக்கு கண் திறத்தல் ஆகியவற்றுடன் தொடங்கிய நிகழ்ச்சி 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை காவிரியில் தீர்த்தமடை எதிர்த்து வரப்பட்டு அஷ்டபந்தனம் சாற்றப்பட்டது 25ஆம் தேதி கோபுர கலசங்கள் வைத்தல் விக்கிரகங்களுக்கு சிறப்பு பூஜைகள் ஆகியவை நடைபெற்றது 26ம் தேதி திங்கட்கிழமை இரண்டாம் கால யாக பூஜை,தொடர்ந்து நடந்த 4 கால யாக பூஜைகள் நிறைவு பெற்றது தொடர்ந்து 27ம் தேதி செவ்வாய்க் கிழமைமாலை 5 ஆம் கால யாக பூஜைகள் ஆரம்பமானது வேதனை தொடர்ந்து இரவு சாமி வேடம் அணிந்தவர்கள் ஆடல்கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை பூர்ணகுதி மகா தீபாரதனை, யாத்திரை தானம் ஆகியவை செய்யப்பட்டு கலசங்கள் ஆலயத்தை வலம் .வந்தது தொடர்ந்து அருள்மிகு சினந் தீர்த்த விநாயகர், மகாமுனீஸ்வர சுவாமிகள் மற்றும் பரிவார தெய்வங்கள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து பெரிய ஓங்காளியம்மன் மூலஸ்தானம் மற்றும் உற்சவருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.அக்னி சொரூபமாக காட்சியளிக்கும் மகா சக்தி வாய்ந்த சுவாமியாக கருதப்படும் பெரிய ஓங்காளியம்மன் கோவில் பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்து 50 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கும்பாபிஷேகம் என்பதால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கும்பாபிஷே நீர் தெளிக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது 29ஆம் தேதி வியாழக்கிழமை முதல் 48 நாட்கள் தினசரி மண்டலாபிஷேக பூஜைகள் தொடர்ந்து நடைபெற உள்ளது கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கும்பாபிஷேகத்துக்கான முன்னேற்பாடுகளை முன்னிருந்து செய்த திருச்செங்கோடு நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு பிஆர்டி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன் மற்றும் திருவிழாஆலோசனைக் குழு உறுப்பினர்கள் தியாகராஜன் பாலுசாமி மாதவ கிருஷ்ணன் பிரபாகரன் முருகேசன் தங்கவேல் ராமசாமி பாலமுரளி கிருஷ்ணன் உள்ளிட்டபலரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Similar News