கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாள் தொடர் காத்திருப்பு போராட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாள் தொடர் காத்திருப்பு போராட்டம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 46 கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்;

Update: 2026-01-28 16:45 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் மூன்று நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிராம நிர்வாகத்தின் முதுகெலும்பாக திகழும் கிராம நிர்வாக அலுவலகத்தை கழிப்பறை குடிநீர் மற்றும் இணைய வசதியுடன் கூடிய நவீனமயமாக்கம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலகமாக அமைத்து தர வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களின் டிஎன்பிஎஸ்சி நேரடி நியமன முறையில் கல்வித் தகுதி பட்டப் படிப்பு என மாற்றியமைக்க வேண்டும். பதவி உயர்வு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது பத்தாண்டு பணி முடித்தவர்களுக்கு தேர்வுநிலை கிராம நிர்வாக அலுவலர் எனவும், 20 ஆண்டு பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர் எனவும் பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும். அதற்கேட்ப ஊதிய உயர்வும் வழங்க வேண்டும்.கிராம நிர்வாக அலுவலர்களின் பதவி உயர்வில் கிராம நிர்வாக அலுவலர் இளநிலை உதவியாளர் தட்டச்சர்களின் விகிதாசாரங்களுக்கு ஏற்ப 30 சதவீதம் என்பதிலிருந்து 50 சதவீதமாக மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும். தேர்வு நிலை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் ஊதியமும்,சிறப்பு நிலை கிராம நிர்வாக அலுவலர்களுக்கு துணை வட்டாட்சியர் நிலையில் ஊதியம் வழங்க வேண்டும். டி எஸ் எல் ஆர் பட்டா மாறுதலில் கிராம நிர்வாக அலுவலர்களின் பரிந்துரையை பெற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் இது நாள் வரை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகமெங்கும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நாளை சென்னையில் காத்திருக்கும் போராட்டமும் நாளை மறுநாள் மீண்டும் வட்டாட்சியர் அலுவலகங்களில் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்களின் சங்கத்தின் துணைத் தலைவர் நந்தகுமார் தெரிவித்தார். வடக்கு மண்டலம் சார்பாக 1500 பேர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். திருச்செங்கோடு வட்டத்தை பொருத்தவரை 46 கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு கலந்து கொண்டு ஈடுபட்டுள்ளனர்.

Similar News