நிலக்கோட்டையில் போதை தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
Dindigul;
திண்டுக்கல் நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி, காவல்துறை, ரோட்டரி சங்கம் சார்பாக போதை தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் கல்லூரி மாணவிகள் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டாதீர், சீட் பெல்ட் அணியுங்கள், போதைப்பொருள் மற்றும் மது போதையில் வாகனம் ஓட்டாதீர், போதையை தொடாதே வாழ்க்கையை கெடுக்காதே, போதைப் பொருள் நண்பன் போல் வரும் பகைவன் போல் உன்னை அழித்துவிடும் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்திய படி சென்றனர். பேரணி நிலக்கோட்டை பேருந்து நிலையம் முன்பு தொடங்கி மெயின் ரோடு, நான்குமுனை சந்திப்பு, வத்தலக்குண்டு ரோடு வழியாக அரசு மகளிர் கலைக் கல்லூரியில் நிறைவடைந்தது