போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 03 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 03 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2,000/- அபராதம் விதித்து திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு;

Update: 2025-10-11 06:54 GMT
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் குட்டியபட்டி பகுதியைச் சேர்ந்த வினோத்குமார்(25) என்பவரை சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அறிவுறுத்தலின்படி சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அமுதா அவர்கள், நீதிமன்ற தலைமை காவலர் சாந்தி அற்புத மேரி மற்றும் அரசு வழக்கறிஞர் ஜோதி சீரிய முயற்சியால் திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி வினோத்குமார் என்பவருக்கு 03 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள். மேலும் இந்தாண்டு இதுவரை 54 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News