ராமநாதபுரம் புதிய ரயில் பாலம் அக்டோபர் 1 முதல் இயங்கும் ரயில்வே பொது மேலாளர் தெரிவித்துள்ளார்

பாம்பன் புதிய ரயில் பால பணிகள் செப்டம்பர் 2024 கடைசி வாரத்தில் பணிகள் முடிக்கப்பட்டு அக்டோபர் 1 முதல் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்க வாய்ப்பு உள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் செய்திக் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

Update: 2024-07-26 02:26 GMT
ராமநாதபுரம் பாம்பன் பழைய ரயில் தூக்கு பாலம் உறுதித் தன்மை குறைந்த காரணத்தால் பழைய ரயில் பாலத்தில் ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு அதன் அருகாமையில் ரூபாய் 550 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பால கட்டுமான பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்தன இந்நிலையில் பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டுமான பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ள நிலையில் 2024 செப்டம்பர் கடைசி வாரத்த்துக்குள் முன்பதிவு செய்தல், குழிகள் தயார் நிலை, பணியாளர்கள் ஆலோசனை பயிற்சி. மின்சாரம் வழங்குதல், ஏற்பாடுகள், சிக்னல் லிங்க் மற்றும் தகவல் தொடர்பு ஏற்பாடுகள், பாம்பன் பாலத்துக்கு மேல் மேல் 10 சதவீத வேக சோதனைகள் உட்பட பாதையின் பொருத்தம், போன்ற தேவையான ஏற்பாடுகளை 2024 செப்டம்பர் 30க்கு முன் மேற்கொள்ளப்படலாம் பணிகள் அனைத்தும் தீவிரமாக முடிக்கப்பட்டு அக்டோபர் 1 2024 முதல் மதுரை ராமேஸ்வரம் ரயில் சேவை ஆனது பாம்பன் பாலம் வழியாக துவங்குவதற்கான முகாந்திரம் உள்ளதாக தென்னக ரயில்வே பொது மேலாளர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

Similar News