பிளஸ்- 1 பொதுத்தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

வேலூர் அரசினர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடந்த 11ம் வகுப்பு பொதுத்தேர்வினை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பார்வையிட்டார்.;

Update: 2025-03-05 16:26 GMT
வேலூர் மாவட்டத்தில் 80 மையங்களில் பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. மொத்தம் 16,081 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.வேலூர் அரசினர் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடந்த 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பார்வையிட்டார். அப்போது மாவட்ட கல்வி அலுவலர் மணிமொழி உட்பட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Similar News