டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தொடங்குகிறது;
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மத்திய, மாநில அரசுப்பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய ஆண்டு திட்ட நிரலின்படி, துணை கலெக் டர், போலீஸ் துணை சூப்பிரண்டு உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 முதல்நிலை தேர்வுக்கான அறிவிப்பாணை 2025 ஏப்ரல் மாதத் தில் வெளியிடப்படவுள்ளது. இந்த தேர்வினை போட்டித்தேர்வர்கள் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட் டும் மையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்குகிறது. மேற்கண்ட பயிற்சி வகுப்பில் சிறந்த பயிற்றுனர்களை கொண்டு அனைத்து பாடப்பகுதிகளுக்கும் பயிற்சியளிப்பதுடன், பாடவா ரியாக மாதிரித்தேர்வுகள் நடத்தப்பட்டு இலவசமாக பாடக்குறிப்புகளும் வழங்கப்படும். எனவே திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து போட்டி தேர்வர்களும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன டைய வேண்டும். மேலும் தகவல்களுக்கு 0431-2413510 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக் டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.