பொய்கை மாட்டு சந்தையில் ரூ.1 கோடி வர்த்தகம்!
வேலூர் மாவட்டம் பொய்கை மாட்டு சந்தையில் ரூ.1 கோடிக்கு வர்த்தகம் ஆனது.;

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா பொய்கையில் வாரம்தோறும் செவ்வாய்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.அதன்படி இன்று (மார்.25) நடந்த சந்தையில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மாடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.கறவை மாடுகள் ரூ. 30 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டது. கோடைக்காலம் துவங்கும் நிலையில் சந்தையில் ரூபாய் ஒரு கோடிக்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.