நெமிலி:ஆந்திராவுக்கு கடத்த இருந்த 1டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஆந்திராவுக்கு கடத்த இருந்த 1டன் ரேஷன் அரிசி பறிமுதல்;

Update: 2025-03-28 05:48 GMT
  • whatsapp icon
நெமிலி அடுத்த திருமால்பூர் சஞ்சீவிராயன்பேட்டை பகுதியில் மர்மநபர்கள் சிலர் பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி அதனை மூட்டை, மூட்டையாக கட்டி ரயில்கள் மூலம் ஆந்திராவுக்கு கடத்த உள்ளதாக நெமிலி வட்ட வழங்கல் அலுவலருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வட்ட வழங்கல் தனி வருவாய் ஆய்வாளர் முருகன் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு பார்த்ததில் 16 மூட்டைகளில் 1 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்து அரக்கோணம் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும் ரேஷன் அரிசியை கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News