ஊத்தங்கரையில் ரூ.1½ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்.
ஊத்தங்கரையில் ரூ.1½ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்.;
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மின்னணு முறையில் சந்தை மூலம் கொப்பரை தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. இந்த ஏலத்தில் அதிகபட்சமாக ரூ.227.90-க்கும், குறைந்தபட்சமாக ரூ.127-க்கும் ஏலம் விடப்பட்டது. சராசரி விலையாக ரூ.213-க்கும் ஏலம் போனது. இதில் மொத்தம் ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்துக்கு விற்பனையானதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்தார்.