நாட்றம்பள்ளி அருகே விவசாய நிலத்தில் இருந்த 1. லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான மூன்று தேக்கு மரங்கள் காணவில்லை காவல் நிலையத்தில் புகார்
நாட்றம்பள்ளி அருகே விவசாய நிலத்தில் இருந்த 1. லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான மூன்று தேக்கு மரங்கள் காணவில்லை காவல் நிலையத்தில் புகார்;
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே விவசாய நிலத்தில் இருந்த 1. லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான மூன்று தேக்கு மரங்கள் காணவில்லை என திரைப்படத்தில் வருவது போல வடிவேல் பாணியில் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்த விவசாயி போலீசார் விசாரணை! திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்த மருதுவாணன் என்பவரின் மகன் அமுதவாணன்(60 )இவருக்கு சொந்தமாக நாட்றம்பள்ளி சென்னை பெங்களூர் செல்லும் பைபாஸ் சாலையில் 15 ஏக்கர் அளவிலான விவசாய நிலம் உள்ளது. அந்த விவசாய நிலத்தில் அமுதுவாணன் மாமரம், சப்போட்டா மரம், கரும்பு தேக்குமரம், வாழைமரம் உள்ளிட்டவைகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை விவசாய நிலத்தில் உள்ள மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக நாட்றம்பள்ளி பைபாஸ் சாலையில் உள்ள தனது நிலத்திற்கு அமுதவாணன் சென்றுள்ளார். அப்போது நிலத்திலிருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான மூன்று தேக்கு மரங்களை மர்மநபர்கள் யாரோ வெட்டி சென்றுள்ளதை கண்டு அமுதுவாணன் அதிர்ச்சி அடைந்து நாட்றம்பள்ளி காவல் நிலையத்திற்கு சென்று திரைப்படத்தில் வருவது போல் ஐயா என்னுடைய கிணற்றை காணவில்லை என வடிவேல் கூறுவது போல நிலத்திலிருந்த என்னுடைய மூன்று தேக்கு மரங்களை காணவில்லை எனகூறி வடிவேல் பாணியில் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். புகார் மனுவை பெற்று கொண்ட நாட்றம்பள்ளி போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தேக்கு மரங்களை வெட்டி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.