மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் 1 கோடியே 7 லட்சம் பணம் காணிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியலில் ஒரு கோடியே 7 லட்சம் ரூபாய் காணிக்கையாக பெறப்பட்டது.;

Update: 2025-08-26 05:10 GMT
மதுரை மீனாட்சி அம்மன்கோயில், அதை சார்ந்த 10 உபகோயில்களின் நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டன. திருக்கோயில் இணை ஆணையர் கிருஷ்ணன் முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டன. ரொக்கமாக ரூ. 1 கோடியே 7 லட்சத்து 2 ஆயிரத்து 700, தங்கம் 326 கிராம், வெள்ளி 880 கிராம், வெளி நாட்டு கரன்சி நோட்டுகள் 396 இருந்தன. எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள் வங்கிப் பணியாளர்கள் பலர் இருந்தனர்.

Similar News