திருச்செங்கோடு நகராட்சி 1, 7, 8, 10 வார்டுகளில்வெளியேறும் மழை நீர் செல்லதடை கால்வாய்க்குள் மண் கொட்டியதைக் கண்டித்து நகர்மன்ற உறுப்பினர்கள் வாயைகட்டிக் கொண்டுபோராட்டம்

திருச்செங்கோடு நகராட்சி 1, 7, 8, 10 ஆகிய வார்டுகளில் இருந்து வெளியேறும் மழை நீர்செல்ல சூரியம்பாளையம் பகுதி மக்கள் எதிர்ப்பு அடையாளம் தெரியாத சிலர் பால்காரக் குப்பண்ணங் காடு தெருவில் கால்வாயை உடைத்து கால்வாய் அடைத்து மண்ணை கொட்டி அடாவடி இதனைக் கண்டித்து நகர்மன்ற உறுப்பினர்கள் வாயைகட்டி போராட்டம்;

Update: 2025-12-01 12:59 GMT
திருச்செங்கோடு நகராட்சி 1,7,8,10 ஆகிய வார்டுகளில் இருந்து வெளியேறும் மழை நீர் மற்றும் கழிவு நீர்கால்வாய் அமைக்கப்பட்டு சூரியம்பாளையம் வழியாக செல்ல கடந்த 2021 ஆம் ஆண்டு திட்டம் தீட்டப்பட்டு கால்வாய்கள் அமைக்கும் பணி நடைபெற்றது அப்போது இருந்து சூரியம்பாளையம் பகுதி பொதுமக்கள் தங்களது பகுதி வழியாக மற்ற ஊர்களின் தண்ணீர் வரக்கூடாது என தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் எந்த நிலையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு சூரியம்பாளையம் பகுதிக்கு பாதிப்பு வராத வகையில் தண்ணீர் கொண்டு செல்லப்படும் கால்வாய் அமைக்கப்படும் என நகராட்சி நிர்வாகமும் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரனும் சூரியம்பாளையம் பகுதி பொது மக்களுக்கு உறுதி அளித்ததன் பெயரில் அந்த பகுதி வழியாக தண்ணீர் செல்ல அனுமதி அளித்திருந்தனர். இந்த நிலையில் திருச்செங்கோடு ஒன்று மற்றும் எட்டாவது வார்டு பகுதியில் இருந்து தண்ணீர் வெளியேற சீதாராம் பாளையம் வழியாக மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் காலதாமதம் ஏற்படுவதாக கூறியும்,சமீபத்தில் பெய்த மழையில் சூரியம்பாளையம் சுடுகாட்டில் தண்ணீர் முழங்கால் அளவு தேங்கி இருப்பதால் இறந்தவர்கள் உடலை  புதைக்க முடியாமல் அவதிப்படுவதாககூறி சூரியம் பாளையம் பகுதியைச் சேர்ந்த சிலர் தொண்டிக் கரடு குப்பணங்காடு பகுதியில்லாரியில் பண்ணை கொண்டு வந்து கால்வாயில் கொட்டியும் கால்வாயில் ஒரு பக்கம் பக்கவாட்டு சுவரை பொக்லைன் கொண்டு இடித்தும்நேற்று திடீரென நடவடிக்கையில் ஈடுபட்டனர் இதனை ஒன்றாவது வார்டு கவுன்சிலர் மாதேஸ்வரன் ஏழாவது வார்டு கவுன்சிலர் கலையரசி எட்டாவது வார்டு கவுன்சிலர் தினேஷ் குமார் பத்தாவது வார்டு கவுன்சிலர் ராஜவேல் ஆகியோர் அறிந்து பொக்லைனை சிறைபிடித்தனர். இதனால் சூரிய பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கவுன்சிலர்களிடம்வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இது குறித்த தகவல் இந்த திருச்செங்கோடு நகரகாவல் நிலையத்தில் வந்து இரு தரப்பினரையும் இந்த கலைந்து போக செய்தனர். கால்வாய் அடைக்கப்பட்டதால்தண்ணீர் குப்பணங்காடு பகுதியில் தேங்கி அங்கு வாழும் சுமார் 40 குடும்பங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் நிரந்தர தீர்வு காண வேண்டும் கால்வாயை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மெத்தன போக்கை கைவிட வேண்டும்என வலியுறுத்தி1,7,8,10வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அந்தப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திருச்செங்கோடு நகராட்சி அலுவலகம் முன்பு வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் கவுன்சிலர்கள் போராட்டத்தை அடுத்து திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் வாசுதேவன்,பொறியாளர் சரவணன், துப்புரவு அலுவலர் சோழராஜ், திருச்செங்கோடு காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி,துணை ஆய்வாளர்கள் சேகர் கணேசன் ஆகியோர் குப்பணங்காடு பகுதிக்கு வந்து கால்வாயை அடைத்திருந்த மண் மற்றும் கற்களை பொக்லைன் உதவியுடன் அகற்றினர். இதனை அடுத்து தேங்கி நின்ற தண்ணீர் வெளியேறியது. இது குறித்த தகவல் அறிந்த சூரியம்பாளையம் சட்டையம்புதூர் பகுதி பொதுமக்கள் எங்கள் பகுதி வழியாக தண்ணீர் செல்லக்கூடாது என்பதற்காகத் தான் இதனை அடைத்திருக்கிறோம் மீண்டும் இதனை நீங்கள் எடுத்து விட்டால் என்ன பொருள் எங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவே கிடைக்காதா? நான்கு ஆண்டுகளாக இதே பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது தற்போது சூரியம்பாளையம் சுடுகாட்டு பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இறந்தவர்கள் உடலை புதைக்க முடியாத நிலையில் மாற்றி ஏற்பாடு உடனடியாக செய்ய வேண்டும் எனஉரத்த குரலில் கூறினர்.இதனால் குப்பணங்காடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு பக்கம் கவுன்சிலர்கள் வாயில் துணியை கட்டிக்கொண்டு போராட்டம் மற்றொரு பக்கம்பொது மக்களின் எதிர்ப்பு குரல் இவைகளை சமநிலைப்படுத்தி தீர்வு காண வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்இந்த பிரச்சனை குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் ராஜவேல் தினேஷ்குமார் மாதேஸ்வரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது நமக்கு நாமே திட்டத்தில் ஒரு கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து ஏதாவது ஒரு பிரச்சனை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்கள் ஆனாலும் படிப்படியாக பேசிவார்த்தை நடத்தி வடிகால் கட்டி முடிக்கப்பட்டது இடையில் சிலர் எங்கள் பகுதி வழியாக மற்ற ஊர் தண்ணீர் வரக்கூடாது எனக் கூறி கால்வாயை இடித்தனர் இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று ஆறுமுறை நடந்தும் முடிவு எட்டப் படாததால் இனிமேல் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது இரு தரப்பினரும் எதுவும் செய்யக்கூடாது என தீர்ப்பு வழங்கிய நிலையில் நாங்கள் அமைதியாக இருந்தோம். மாற்றுப்பாதையில் மழை நீரை கொண்டு செல்ல திட்டம் தீட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிலர் வேண்டுமென்றே மண்ணைக் கொண்டு வந்து கால்வாயில் கொட்டி அடைத்து கால்வாயை மீண்டும் பொக்லைன் மூலம் இடித்துள்ளனர் அடாவடியான இது போன்ற நடவடிக்கைகளால் எந்த பணியும் செய்ய முடியாது. இதுகுறித்து கேட்ட நகர்மன்றஉறுப்பினர்களாகிய எங்களை கீழே தள்ளி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளுமுள்ளு ஏற்படுத்தினர் எனக் கூறினார்கள். அவரவர்களே அந்தந்த பகுதியில் கால்வாயை அடைத்துக் கொண்டால் நகரம் முழுக்க மழை நீர் தேங்கி தான் இருக்கும் வெளியேற வழி இருக்காது எனவே இரு தரப்பையும் அழைத்துப் பேசி சுமுகமான தீர்வு காண வேண்டுமென சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் வாசுதேவன் பொறியாளர் சரவணன் நகர காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி ஆகியோர் சூரியம்பாளையம் பகுதியில் என்னிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.பேச்சுவார்த்தையின் முடிவில்சூரியம்பாளையம் பகுதி வழியாக தண்ணீர் செல்லாமல் தடுத்துநிறுத்தி ஏற்கனவே அடைத்த இடத்தில் மீண்டும் அடைத்து விடுவது எனவும் வேறு ஒரு பகுதியில் உடைப்பு ஏற்படுத்தி ஏற்கனவே தண்ணீர் தேங்கி நின்ற பகுதியில் காட்டுக்குள் அனுப்பி விடுவது எனவும் இடைப்பட்ட இடத்தில் இருக்கிற தண்ணீரை தினசரி உறிஞ்சி எடுத்து விடுவது எனவும் நகராட்சியின் புதிய திட்டப்படி சூரியம்பாளையம் பகுதிக்குள் செல்லாமல் மாற்றுப்பாதையில் மழை நீரை கொண்டு செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது இதன் அடிப்படையில் இரண்டு தரப்பினரும் அமைதியாக கலைந்து சென்றனர்

Similar News