திண்டுக்கல் அருகே கல்லூரியில் 10 வது பட்டமளிப்பு விழா
திண்டுக்கல் அருகே கல்லூரியில் 10 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-21 14:47 GMT
மாணவருக்கு பட்டம் வழங்கல்
திண்டுக்கல்லை அடுத்த நொச்சி ஓடைப்பட்டி அருகே உள்ள அணுக்கிரகா கல்லூரியில் 10 வது பட்டமளிப்பு விழா நடந்தது.இதற்கு கல்லூரி செயலர் ஜார்ஜ் பெர்னாட்ஷா தலைமை தாங்கி விழாவினை தொடங்கி வைத்தார். முன்னதாக கல்லூரி முதல்வர் ஐசக் வரவேற்புரையாற்றினார்.
இந்த விழாவில் மதுரை காமராசர் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ,மாணவியர்களுக்கு பட்டமளிப்பு சான்றிதழும்,மதுரை காமராஜர் பல்கலைக்கழக அளவில் முதலாம் இடம் பிடித்தவர்களுக்கு கேடயமும்,பதக்கமும் வழங்கினார்.