கன்னியாங்குப்பம் கிராமத்தில் 10 லட்சம் மதிப்பில் புதிய நியாய விலை கட்டிடம்
எம் எல் ஏ ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்
விருத்தாசலம் ஒன்றியம் புலியூர் ஊராட்சி கன்னியாங்குப்பம் கிராமத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டிடம் அமைக்க விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் அவர்கள் அடிக்கல் நாட்டினார். விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இப்ராஹிம், மோகனாம்பாள், பொறியாளர்கள் சண்முகம், ருக்மணி, கார்த்தி, காங்கிரஸ் வட்டார தலைவர் இராவணன், ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழிபாலு, அரசு நெடுஞ்சாலை துறை முதல்நிலை ஒப்பந்ததாரர் குழந்தைவேல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.