பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் 10 ரூபாய் நாணயங்கள் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு
ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பங்கேற்பு;
பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் 10 ரூபாய் நாணயங்கள் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆய்வுக்கூட்டம் கடலூரில் மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் 10 ரூபாய் நாணயங்கள் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வங்கி மேலாளர்கள். வர்த்தக சங்கங்கள், எரிபொருள் நிறுவனங்கள். தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம், வணிகவரித்துறை, நுகர்வோர் அமைப்பினர்களுடன் இன்று (20.12.2024) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் சில வணிக இடங்களில் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் 10 ரூபாய் நாணயத்தின் செல்லுபடி தன்மை குறித்த சந்தேகத்தின் காரணமாக 10 ரூபாய் நாணயங்களை ஏற்க மறுக்கிறார்கள் என மாவட்ட நிருவாகத்தின் கவனத்திற்கு வரப்பெற்றுள்ளது. இந்திய அரசின் கீழுள்ள நாணய தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்தில் விடுகிறது. நாணயங்கள் பொருளாதார. சமூக மற்றும் கலாச்சார மதிப்புகளின் பல்வேறு கருப்பொருட்களை பிரதிபலிக்கும் தனித்துவமான அம்சங்களை கொண்டுள்ளன. மேலும், புதிய நாணயங்கள் இந்திய அரசால் அவ்வப்போது அறிமுகப்படுத்தப்படுகின்றன. நாணயங்கள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பதால் வெவ்வேறு வடிவமைப்புகள் மற்றும் வடிவங்களை கொண்டு ஒரே நேரத்தில் சந்தையில் புழங்குகின்றன. நாணயங்களின் தனித்துவமான அம்சங்கள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி மூலம் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. இந்த நாணயங்கள் அனைத்தும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும். நாணயங்களை அனைத்துப் பரிவர்த்தணைகளுக்கும் ஏற்றுக்கொள்ளலாம். மேலும், எவரேனும், நாணயங்களை வாங்க மறுக்கும்பட்சத்தில் கடலூர் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் தெரிவிக்கப்பட்டது. புகார் தெரிவிக்கலாம் இக்கூட்டத்தில் இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.இராஜசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜீ உட்பட பலர் கலந்து கொண்டனர்.