உடுமலை அருகே 10 மணி நேரம் பேசி பள்ளி மாணவர்கள் உலக சாதனை
பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன;
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள பெரிய பாப்பனுத்து பகுதியில் உள்ள அன்னை அபிராமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இன்று ஹைரேஞ்ச் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்டு மூலம் 375 மாணவ மாணவிகள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு தலைப்புகளிலும் இரண்டு நிமிடத்தில் சிறப்புரை ஆற்றி உலக சாதனை நிகழ்வு இன்று நடைபெற்றது. இன்று நடைப்பெற்ற துவக்க நிகழ்வில் பல்வேறு தலைப்புகளில் மாணவ மாணவிகள் பேசி அசத்தினர் .இன்று முதல் நாளில் 180 மாணவர்கள் 10 மணி நேரம் இடைவிடாமல் இரண்டு நிமிடங்களில் பல்வேறு தலைப்புகளில் பேசியது மெய்சிலிர்க்க வைத்தது . தமிழகத்தில் அதிக மாணவர்கள் தொடர்ந்து பேசும் பேச்சாற்றல் உலக சாதனையானது இதுவே முதல் முறையாகும் மேலும் இன்று துவங்கிய உலக சாதனை நிகழ்வினை மங்கள பிரதாபன் துவக்கி வைத்தார் அதனைத் தொடர்ந்து பள்ளியின் தாளாளர் சண்முகசுந்தரம் மற்றும் சபிதா சண்முகசுந்தரம் அவர்கள் மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினர். இதற்கிடையில் இந்த நிகழ்வினை மேற்பார்வை செய்த ஹைரேஞ் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட் ஆய்வாளர் முனைவர் குணசேகரன் ( மரகதம் யோகாலயம்) கூறுகையில் இதுபோன்ற நிகழ்வானது மனிதநேயத்தையும் ஒழுக்கத்தையும் இயற்கையையும் பாதுகாக்கும் களமாக அமையும் என்றார் .நிகழ்ச்சியில் ஆசிரியர் ஜிவிதா மாணவச் செல்வங்கள் பேசுவதற்கு பயிற்சி அளித்தனர் , இறுதியாக தமிழ்பிரியங்கா நன்றி உரையாற்றினார் .இந்த நிகழ்வில் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்