கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்த ஆண்டிபட்டி10வது வார்டு கம்யூனிஸ்ட் கட்சி பெண் கவுன்சிலர்
கூட்டம்;
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டு கவுன்சிலர்களுக்கான மாதாந்திர சாதாரண கூட்டம் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் ஆண்டிப்பட்டி திமுக பேரூராட்சி தலைவர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது. இந்தப் பேரூராட்சி கூட்ட அரங்கிற்காக தயார் செய்யப்பட்ட அஜந்தாவில் 10வது வார்டு பெண் கவுன்சிலர் மீனாட்சியின் ஐந்து கோரிக்கைகள் ஏற்படவில்லை. அதனையடுத்து இன்று பேரூராட்சி அலுவலக கூட்டஅரங்கிற்கு வந்த கவுன்சிலர் மீனாட்சி கூட அரங்கில் திமுக பேரூராட்சி தலைவர் பேரூராட்சி செயல்அலுவலரிடம் தங்களது கோரிக்கைகளை ஏன் ஏற்றவில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.அப்போது உடன் அதிமுக திமுக கவுன்சிலர்களும் அவருக்கு ஆதரவாக பேரூராட்சி தலைவரிடம் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து கவுன்சிலர் மீனாட்சி தன் கோரிக்கைகளை அஜந்தாவில் ஏற்றாததை கண்டித்து பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கை விட்டு வெளிநடப்பு செய்தார். இதனால் பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.