ஆதீனம் வழங்கும் மதிய உணவு ரூ.10, உணவகம் திறப்பு

Update: 2025-04-11 08:27 GMT
தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் ஒருவேளை உணவு ரூ.10-க்கு வழங்கும் வகையில் ரூ 20 லட்சம் செலவில் அதிநவீன சமையல் உபகரணங்களுடன் ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்ட "திருவடி உணவுச் சாலை" யை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்குனி உத்திர திருநாளான இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இந்த உணவுச் சாலையில் வயோதிகர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Similar News