மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையின் இறுதியில், 10 மனுக்கள் மீது உடனடி தீா்வு.

மாநில தகவல் ஆணையா் மா.செல்வராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் முன்னிலை வகித்தாா்.;

Update: 2025-04-27 18:57 GMT
தமிழ்நாடு தகவல் ஆணையம் சாா்பில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையின் இறுதியில், 10 மனுக்கள் மீது உடனடி தீா்வு காணப்பட்டது. மனுதாரா்களின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. இதில் மாநில தகவல் ஆணையா் மா.செல்வராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் முன்னிலை வகித்தாா். முகாமில், திருவண்ணாமலை மாவட்ட அரசுத் துறைகளின் பொதுத்தகவல் அலுவலா்கள் பதிலளிக்காத காரணத்தால் மேல்முறையீடு செய்யப்பட்ட 60 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டது. தலைமை தகவல் ஆணையா் மா.செல்வராஜ் தலைமையிலான தகவல் ஆணையா்கள் இந்த விசாரணையை மேற்கொண்டனா். விசாரனையின்போது மேல்முறையீட்டு மனுதாரா்கள் மற்றும் பொது தகவல் அலுவலா்களை நேரில் அழைத்து விசாரணை செய்யப்பட்டது. இறுதியாக, 10 மனுக்கள் மீது மாநில தகவல் ஆணையரால் உடனடி தீா்வு காணப்பட்டது

Similar News