தேன்கனிக்கோட்டை அருகே கணவரைக் கொன்ற மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை.

தேன்கனிக்கோட்டை அருகே கணவரைக் கொன்ற மனைவிக்கு 10 ஆண்டுகள் சிறை.;

Update: 2025-06-26 01:14 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த கலகோபசந்திரத்தைச் சோ்ந்தவா் பாப்பிரெட்டி (48) இவா் தனது மனைவியை அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து அடித்ததாக கூறப்டுகிறது. இந் நிலையில் கடந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி மனைவி மஞ்சுளாவை (45) கட்டையால் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மஞ்சுளா அவரிடமிருந்து கட்டையை பறித்து பாப்பிரெட்டியை திருப்பித் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த பாப்பிரெட்டி இறந்தார். அது தொர்பாக தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து மஞ்சுளாவைக் கைது செய்தனா். வழக்கு நடந்து வந்த நிலையில் ஒசூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் நேற்று குற்றம்சாட்டப்பட்ட மஞ்சுளாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தார்.

Similar News