வழக்கில் இருந்து சிபிஎம் நிர்வாகிகள் 10 பேரை பட்டுக்கோட்டை நீதிமன்றம் விடுவித்தது

தீர்ப்பு;

Update: 2025-07-18 13:31 GMT
ஒன்றிய அரசின் சட்ட நகலை எரித்ததாக காவல்துறையால் தொடரப்பட்ட வழக்கில் இருந்து, போதிய ஆதாரம் இல்லை என சிபிஎம் தோழர்கள் 10 பேரை நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அஞ்சல் நிலையம் அருகே கடந்த 11.02.2023 அன்று  நடைபெற்ற போராட்டத்தில், இருபது பேர் எவ்வித அனுமதியும் இன்றி, அரசு உத்தரவை மீறி, போக்குவரத்துக்கு இடையூறாக, ஒன்றிய அரசு கொண்டு வந்த நிதிநிலை அறிக்கையை எதிர்த்தும், அதன் நகலை எரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக  பட்டுக்கோட்டை நகரக் காவல்துறை உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் என்பவர், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மூத்த தலைவர் கோ.நீலமேகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம், சிபிஎம் நிர்வாகிகள் பெஞ்சமின், ரெ.ஞானசூரியன், ஜீவானந்தம், சரோஜா, தமிழ்செல்வன், சாமிநாதன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், வழக்கை விசாரித்த பட்டுக்கோட்டை நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கில், போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து, 10 பேரையும் விடுவித்து வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கில் சிபிஎம் தரப்பில்  வழக்குரைஞர் ஜெயவீரபாண்டியன் ஆஜராகி வாதாடினார்.

Similar News