மானாமதுரையில் 10வது கிளை மாநாடு நடைபெற்றது
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க கிளை மாநாடு நடைபெற்றது;
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க 10ஆவது கிளைமாநாடு கிளைத்தலைவர் தேவதாஸ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் பாலமுருகன், பொதுப்பணித்துறை பொன்னையா, கவிஞர் சோமசுந்தரபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மானாமதுரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்கிடவும், நூலகத்திற்கு அடிப்படை வசதிகள் செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன