போச்சம்பள்ளி: சாலை விபத்தில் உயிரிழந்த அதிமுக தொண்டர் குடும்பத்தாருக்கு ரூ. 10 லட்சம்
போச்சம்பள்ளி: சாலை விபத்தில் உயிரிழந்த அதிமுக தொண்டர் குடும்பத்தாருக்கு ரூ. 10 லட்சம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள கீழ்மைலம்பட்டியை சேர்ந்த க.தங்கராஜ் கடந்த 12-ம் தேதிஅன்று பர்கூரில் நடைபெற்ற, எழுச்சிப் பயண பிரச்சாரத்தில் கலந்துகொண்டு வீடு திரும்பும் போது எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து. மருத்துவ மனையில்சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது குடும்பத்தாருக்கு 10 லட்சம் ரூபாய் அறிவித்தார். அதை தம்பிதுரை எம்.பி. அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார். இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.