யோகாவில் கின்னஸ் சாதனை படைத்த மன்னார்குடி மாணவிகள் 10 பேர்

மதுரையில் நடைபெற்ற நீண்ட நேர யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்த மன்னார்குடி மாணவிகள்;

Update: 2025-08-31 14:25 GMT
கலாம் ட்ரெடிஷனல் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் உலக கின்னஸ் சாதனை படைப்பதற்கான யோகா போட்டிகள் மதுரையில் நடைபெற்றது. இந்தியா முழுவதும் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவர்களும் தமிழகத்தைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.கின்னஸ் சாதனைக்கான நீண்ட நேரம் யோகா போட்டியில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி யோகா பயிற்சி மையத்தை சேர்ந்த 10 மாணவிகள் பங்கேற்று பலவிதமான யோக பயிற்சிகளை தொடர்ந்து பத்து நிமிடங்கள் வரை செய்து சாதனை படைத்துள்ளனர்.

Similar News