பனை விதைகளை சேமிக்க கிடங்கு கேட்டு 10 லட்சம் பனை விதைகள் தருவதாக கூறிய விவசாயி மனு

ஆண்டுக்கு 10 லட்சம் பனை விதைகள் தருவதாக கூறிய குமாரபாளையம் விவசாயி, பனை விதைகளை சேமிக்க கிடங்கு அமைத்து தரக்கோரி கிராமசபா கூட்டத்தில் மனு கொடுத்தார்.;

Update: 2025-10-12 13:35 GMT
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சியில் நடந்த கிராமசபா கூட்டத்தில் வட்டார உதவி பொறியாளர் தங்கராஜ் தலைமை வகித்தார். இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பொதுமக்களுக்கு தமிழகத்தின் திட்டங்கள் குறித்து பேசினார். ஆண்டுக்கு 10 லட்சம் பனை விதைகள் தருவதாக கூறிய குமாரபாளையம் விவசாயி விஸ்வநாதன் பனை விதைகளை சேமிக்க கிடங்கு அமைத்து தரக்கோரி கிராமசபா கூட்டத்தில் மனு கொடுத்தார். மேலும் குடிநீர் டேங்க், வடிகால், தார்சாலை, குப்பாண்டபாளையம் கொண்டு செல்லப்பட்ட கிளை அஞ்சல் நிலையத்தை மீண்டும் தட்டான்குட்டை ஊராட்சி பகுதியில் அமைக்க கோரியும், பழுதான பழைய, சிமெண்ட் அட்டை போடப்பட்ட பாதுக்காப்பற்ற ரேசன் கடைக்கு பதிலாக, அரசு நிலத்தில் நிரந்தரமாக ரேசன் கடை புதிய கட்டிடம் அமைக்கவும் , பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Similar News