தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 48 மணி நேரம் தொடர் வேலை நிறுத்த போராட்டம் ...*
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 48 மணி நேரம் தொடர் வேலை நிறுத்த போராட்டம் ...*;
விருதுநகரில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 48 மணி நேரம் தொடர் வேலை நிறுத்த போராட்டம் ... விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக மாவட்ட தலைவர் மாரிமுத்து தலைமையில், தமிழக அரசு களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்திட வேண்டும், தரமிறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை மீண்டும் வழங்கிட வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் , துணை ஆய்வாளர் ஆய்வாளர் ஊதிய முரன்பாட்டை கலைந்திட வேண்டும், புற ஆதார முறையில் உரிமம் பெற்ற நில அளவர் நியமனத்தினை முற்றிலும் கைவிட வேண்டும், உயர் அலுவலர்களின் அதிகாரங்களை பறிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், நீதிமன்ற பயிற்சி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் 48 மணி நேரம் தொடர் வேலைுத்த போராட்டத்தில் ஈடுபட்டும், தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்