நகை ஆச்சாரி வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் தங்க நகை,மற்றும் 80ஆயிரம் பணம் திருட்டு

ஆரணி பெரியகடைவீதியில் நகை ஆச்சாரி வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் தங்க நகை மற்றும் 80ஆயிரம் பணம் ஆகியவற்றை செவ்வாய்கிழமை நள்ளிரவில் மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக உள்ளது.;

Update: 2025-10-29 17:25 GMT
ஆரணி பெரியகடைவீதியில் நகை ஆச்சாரி வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் தங்க நகை மற்றும் 80ஆயிரம் பணம் ஆகியவற்றை செவ்வாய்கிழமை நள்ளிரவில் மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பெரியகடைவீதியின் குறுக்குதெருவான பெருமாள் தெருவைச் சேர்ந்த நகை ஆச்சாரி எஸ்.எஸ்.மணி(75) இவரது மனைவி காஞ்சனா(64) தம்பியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வெங்கடேசன்(42) என்ற மகன் சென்னையில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்துகொண்டு வசித்து வருகிறார். இந்த நிலையில் எஸ்.எஸ்.மணி, காஞ்சனா தம்பதியினர் தீபாவளி முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது மகன் வீட்டிற்கு சென்று உள்ளனர். இந்தநிலையில் புதன்கிழமை காலையில் ஆச்சாரி எஸ்.எஸ்.மணி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை மாடி வீட்டில் குடியிருப்பவர்கள் பார்த்தனர். மேலும் உடனடியாக ஆச்சாரி எஸ்.எஸ்.மணிக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் ஆச்சாரி எஸ்.எஸ்.மணி விரைந்து சென்று பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 10 சவரன் தங்க நகை மற்றும் 80ஆயிரம் பணம் ஆகியவை திருடுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஆரணி நகர காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.மணி புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீட்டில் விசாரணை செய்தனர். மேலும் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சுத்தியால் பீரோவை உடைத்து சுத்தியலை அங்கேயே விட்டுச்சென்றுள்ளனர். மேலும் பீரோவிலிருந்த துணிகளை கீழே இறைத்துவிட்டு நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்துச்சென்றுள்ளனர். இதனால் ஆரணி நகர போலீஸார் வீரா என்கிற மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர் எஸ்.ஐ ரமேஷ் தலைமையில் கைரேகை நிபுணர்கள் கைரைகேயை பதிவு செய்தனர். பின்னர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News