அரியலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகை இரண்டு கிலோ வெள்ளி பொருட்கள் ஒரு லட்சம் பணம் கொள்ளையடித்த கொள்ளையர்கள் கைது

அரியலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகை இரண்டு கிலோ வெள்ளி பொருட்கள் ஒரு லட்சம் பணம் கொள்ளையடித்த கொள்ளையர்கள் கைதுசெய்தனர்.;

Update: 2025-02-20 03:24 GMT
அரியலூர் , பிப்.20- அரியலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகை, 2 கிலோ வெள்ளி  ஒரு லட்சம்  பணம் கொள்ளையடித்து சென்ற ஐந்து நபர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே கச்சிப்பெருமாள் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தா. இவர் கடந்த 14ம் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு 100 நாள் வேலைக்காக சென்றுள்ளார் அப்பொழுது பட்ட பகுதி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள்   பீரோவில் இருந்த 2 கிலோ வெள்ளி பொருட்கள், 1 லட்சம் பணம், 100 பவுன் நகை  கொள்ளையடித்து சென்றனர் இது குறித்து வசந்தா ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் பார்த்ததாக அப்பகுதி பொதுமக்கள் கூறிய காரை டோல் பூத் மற்றும் சாலையில் அமைக்கப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா பதிவை வைத்து காரின் அடையாளத்தை கண்டறிந்த போலீசார் அதே சமயத்தில் அவ்விடத்தில் செல்போன் சிக்னலை வைத்து செல்போன் நம்பரையும் கண்டறிந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மதுரை பகுதியில் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது இதனை அடுத்து மதுரைக்கு சென்ற தனிப்படை போலீசார் வழக்கில் சம்பந்தப்பட்ட  சிவகங்கை மாவட்டம் கீரக்குலம் முத்துப்பட்டியை சேர்ந்த சண்முகநாதன் ராமநாதபுரம் மாவட்டம் சோழந்தூர் கிராமத்தைச் சேர்ந்த காளிதாஸ் சிவகங்கை மாவட்டம் குளந்தன்குளம் கிராமத்தை சேர்ந்த மணிக்காளையன் தூத்துக்குடி மாவட்டம் தொப்பன்பட்டி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் சிவகாசி மாவட்டம் சாமியபுரம் கிராமச்சேர்ந்த அழகு பாண்டி ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்  குற்றவாளிகளிடமிருந்து 37 சவரன் தங்க நகைகள், 430 கிராம் வெள்ளி, 40 ஆயிரம் ரூபாய் பணம், மற்றும் திருட்டுக்கு உபயோகித்த கார் முதலியவற்றை போலிசார்  கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் .

Similar News