ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்திருடப்பட்ட 100 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
இணையதளம் மூலம் ஆசையை தூண்டுபவர்களை நம்பாதீர்கள் எஸ்பி எச்சரிக்கை;
ராமநாதபுரம் மாவட்டத்தில் காணாமல் போன மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களிடம் உரிய விசாரணை நடத்தி உரியவர்களின் செல்போனை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் .IPS., அவர்களால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது ராமநாதபுரம் மாவட்டத்தில் 2025-ம் ஆண்டில் செல்போன் காணாமல் போனது தொடர்பாக காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட மனு ரசீதிற்கு நடவடிக்கை மேற்கொண்டு, சுமார் 25 இலட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு, உரிய நபர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்.IPS., அவர்களால் வழங்கப்பட்டது. அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய எஸ் பி இணையதளம் மூலம் ஆசை வார்த்தைகளை கூறியும் அதிகளவு பணம் கிடைக்கும் என்ற ஆசையை தூண்டும் பல்வேறு பதிவுகளை தனிப்பட்ட முறைகளும் குழுவிலும் பலர் அனுப்புகின்றனர் இதில் ஏராளமான கிராம பகுதிகளைச் சார்ந்த ஏழை எளிய மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள் காவல்துறை நீதிபதி பேங்க் மேனேஜர் இன்கம் டேக்ஸ் அதிகாரி லஞ்ச ஒழிப்புத்துறை இ டி உள்ளிட்ட பல்வேறு துறைகளை கூறியும் அதிகாரிகள் என்று நம்ப வைத்து பணம் பறிக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது மிகவும் விழிப்புடன் பொதுமக்கள் இருக்க வேண்டும் இல்லையேல் நமது பணம் செல் போன் பறிமுதல் ஆகும் சூழ்நிலை தற்போது அதிகரித்து வருகிறது இதில் மாணவர்கள் இளைஞர்கள் முதியவர்கள் எதிலும் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார் அதன் பின்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டு காலத்தில் எல்லோருக்கும் மேற்பட்ட செல்போன் காணாமல் போகி உள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது அதில் இதுவரை நான் ஒரு செல்போன்கள் மீட்க பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று எஸ்பி சந்திஸ் கூறினார்