வாரியங்காவலில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.4034 கோடியை வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் திமுக-வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
வாரியங்காவலில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.4034 கோடியை வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் 100-க்கு மேற்பட்ட திமுக-வினர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.;

ஜெயங்கொண்டம், மார்ச்.30- தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆலோசனையின் பேரில் வாரியங்காவலில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.4034 கோடியை வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் 100-க்கு மேற்பட்ட திமுக-வினர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.*தமிழகத்தில் கடந்த 2005ம் ஆண்டு முதல் கிராம பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் செயல்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றியவர்களுக்கு கடந்த 4 மாதங்களாக மத்திய அரசு ஊதியம் வழங்காமல் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.4034 கோடியை வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக அறிவித்தது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் பஸ் நிறுத்தம் அருகில் திமுக சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ரூ.4034 கோடி வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் வாரியங்காவல் பஸ் நிறுத்தங்களில் ஒன்றிய செயலாளர் கலியபெருமாள் தலைமையில், திமுக-வினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோசங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற வாசகங்களை கூறி அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.