கலைஞர் அவர்களின் 102வது பிறந்தநாள் தேனலை முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி

கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்;

Update: 2025-06-05 14:04 GMT
கலைஞர் அவர்களின் 102வது பிறந்தநாள் தேனலை முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு, நீலகிரி மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் தேனலை ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் மாவட்ட அமைப்பாளர் சசிகுமார் அவர்கள் தலைமையில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கழக பொறுப்பாளர் கே.எம்.ராஜூ அவர்கள் மதிய உணவை வழங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மாவட்ட கழக அவை தலைவர் போஜன், மாவட்ட கழக துணை செயலாளர் ரவிகுமார், கழக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணை செயலாளர் வாசிம் ராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வம், காளிதாசன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பத்மநாபன், நாகராஜ், வினோத்குமார், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் எல்கில் ரவி, கேத்தி பேரூராட்சி தலைவர் ஹேமமாலினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், மேலூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜன், உதகை நகர இளைஞரணி அமைப்பாளர் விஷ்ணுபிரபு, உதகை வடக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் விவேக், குன்னூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் விக்னேஷ், குன்னூர் நகர துணை அமைப்பாளர் காஜா மொய்தீன், ஜெகதளா பேரூர் அமைப்பாளர் அமுல்ராஜ், கழக நிர்வாகிகள் கோபு, ஜெயராம் ராஜா, உள்ளிட்ட கலந்துக்கொண்டனர்.

Similar News