ஈரோடில் கத்திரி வெயில் தொடங்கும் முன்னே 104 டிகிரி எட்டியது
ஈரோட்டில் கத்திரி வெயில் தொடங்கும் முன்பே வெயில் 104 டிகிரியை எட்டியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.;
ஈரோடு மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெப்பக்காற்றும், அனல் காற்றும் வீசி வருவதால் நேற்று வியாழக்கிழமை 104 டிகிரி வெயில் பதிவாகி சுட்டேரித்தது. குறிப்பாக, பகலில் காலை 8 மணி முதலே வெயில் சூட்டை உணர முடிகிறது. தொடர்ந்து, பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியில் தலை காட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கடும் வெயிலால் மாவட்டத்தில் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டமும் மிகவும் குறைந்து காணப்படுகிறது. கடும் வெயில் காரணமாக இளநீர், மோர், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றின் விற்பனையும் படு ஜோராக நடைபெற்று வருகிறது.