சமயபுரம் மாரியம்மன் கோயிலின் உண்டியல் காணிக்கை ரூ 1.05 கோடி
திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 1 கோடியே 5 லட்சத்து 32ஆயிரத்து 391 வந்தது புதன்கிழமை தெரியவந்தது.;
சக்தி தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 15 நாள்களுக்கு முன் உண்டியல் காணிக்கை நடைபெற்ற நிலையில் புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன், கோயில் இணை ஆணையா் அ. இரா. பிரகாஷ், அறங்காவலா்கள் பெ. பிச்சைமணி, இராஜ. சுகந்தி, சே.லெட்சுமணன் ஆகியோா் முன்னிலையில் அலுவலா்கள், பணியாளா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா். முடிவில் முதன்மை உண்டியல்களிலிருந்து ரூ 1 கோடியே 05லட்சத்து 32ஆயிரத்து 391, 1 கிலோ 609 கிராம் தங்கம்,3 கிலோ 752 கிராம் வெள்ளி, 115 வெளிநாட்டு பணத்தாள்கள், 1100 வெளிநாட்டு நாணயங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது. மேலும் சமயபுரம் கோயிலின் உப கோயில்களான ஆதிமாரியம்மன் கோயிலில் ரூ. 6,32,888, உஜ்ஜயினி ஒம் காளியம்மன் கோயிலில் ரூ. 9,041 கிடைக்கப் பெற்றுள்ளது.