ராசிபுரத்தில் ரூ.10.58 கோடி மதிப்பீட்டில் புதியதாக புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊர்வலமாக சென்று ராசிபுரம் நகராட்சியில் மனு..

ராசிபுரத்தில் ரூ.10.58 கோடி மதிப்பீட்டில் புதியதாக புறநகர் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊர்வலமாக சென்று ராசிபுரம் நகராட்சியில் மனு அளித்தனர்...;

Update: 2025-07-29 14:24 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தற்போது செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு பேருந்தானது இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராசிபுரத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அருகே உள்ள அணைப்பாளையம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் இடம் மாற்றம் செய்வதாக அறிவிப்பானது வெளியானது. அறிவிப்பை அடுத்து பேருந்து நிலையத்திற்கு ஒருத்தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். பேருந்து நிலையம் அமைவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் இடையே கருத்து கேட்க வேண்டும் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து பொது அறிவிப்பானது நேற்று வெளியிடப்பட்ட நிலையில் இன்று 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தற்போது உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைப்பயணமாக சென்றனர். ஊர்வலமானது புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி ஆத்தூர் சாலை, கடைவீதி,பெரிய கடைவீதி, சின்ன கடைவீதி, சேலம் சாலை, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட வழியாக வேண்டும் வேண்டும், புறநகர் பேருந்து நிலையம் வேண்டும்!!,தடுக்காதே தடுக்காதே ராசிபுரம் நகர வளர்ச்சியை தடுக்காதே!! என கோஷம் எழுப்பியவாறு சென்று இறுதியாக நகராட்சி அலுவலகத்தில் இருந்த நகராட்சி ஆணையாளர் பொறுப்பு கோபிநாத் அவர்களிடம் பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் என பலர் பேருந்து நிலையம் வேண்டுமென மனு அளித்தனர். நேற்று ஒரு தரப்பினர் பேருந்து நிலையம் இடம் மாற்றம் செய்யக்கூடாது என மனு அளித்த நிலையில் செவ்வாய்க்கிழமை இன்று பேருந்து நிலையம் வேண்டும் என மற்றொரு தரப்பினர் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது...

Similar News