தேனி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம் நாளை நடைபெறுகிறது

கூடுதல் விபரங்களுக்கு 044-2888 8060 என்ற போனில் தொடர்பு கொள்ளலாம்.' என தெரிவிக்கப்பட்டு உள்ளது

Update: 2024-08-29 05:25 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேனி மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு முகாம் தேனி மருத்துவக் கல்லுாரியில் நாளை (ஆக., 30ல்) நடக்க உள்ளது.' என மாவட்ட மேலாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் அவரது அறிக்கையில் மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட ஒருங்கிணைந்த மாவட்டங்களுக்கான 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்திற்கு ஆட்கள் தேர்வு முகாம் ஆக., 30ல் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் நடக்க உள்ளது. ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர்கள் பணிக்கு பி.எஸ்சி., நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.எம்.எல்.டி., (பிளஸ் 2 விற்கு பின் 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது பி.எஸ்சி., உயிரியல், விலங்கியல், தாவரவியல், உயிர் வேதியியல், நுண்ணுயிரியல், உயிர் தொழில்நுட்பவியல் உள்ளிட்ட துறையில் ஏதாவது ஒன்றில் பட்டப்படிப்பு படித்திருப்பது அவசியம். மாத ஊதியம் ரூ.16,080 வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அன்று 19 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, மருத்துவத்துறை நேர்முகத்தேர்வு, உடற்கூறியல் முதலுதவி, நர்சிங் அடிப்படையில் தேர்வானவர்களுக்கு 50 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். டிரைவர், 10ம் வகுப்பு தேர்ச்சி. 24 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருப்பது அவசியம். ஊதியம் ரூ.15,820 வழங்கப்படும் உயரம் 162.5 செ.மீ., இருக்க வேண்டும். ஓட்டுநர் லைசென்ஸ் பெற்று மூன்றாண்டுகளும், பேட்ஜ் எடுத்து ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். ஐந்து தேர்வுமுறைகளில் தேர்வானவர்களுக்கு 10 நாட்கள் வகுப்பறை பயிற்சி வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு 044-2888 8060 என்ற போனில் தொடர்பு கொள்ளலாம்.' என தெரிவித்துள்ளார்.

Similar News