பாணாவரம் அருகே 1,085 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்!
1,085 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல்!;

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் போலீசார் எலத்தூர் பெரிய தெருவில் ராஜலிங்கம் என்பவருக்கு சொந்தமான பங்க் கடையில் சோதனை நடத்தி அரசால் தடை செய்யப்பட்ட 135 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். அதேபோன்று வேலு என்பவர் கடையில் சோதனை நடத்தி 950 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கைது செய்தனர். இரண்டு கடைகளிலும் மொத்தம் 1,085 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர்.