ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பாக தமிழக அரசின் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்பது உட்பட 11 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது.;
ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பாக தமிழக அரசின் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும் என்பது உட்பட 11 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும், டெட் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விலக்கு அளிக்கவும், ஆசிரியர்களின் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வினை உடனடியாக வழங்கிடவும், அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிர்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தினை பணிக்காலமாக வரன்முறை படுத்த வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் புருஷோத்தமன், சிவ.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகன், வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகிகள் செந்தில்நாதன், சுரேஷ், ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் நிர்வாகிகள் ஆனந்த், பாஸ்கரன், தேவராஜ், முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் ரஷித் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். முடிவில் அரசு ஊழியர் சங்க துணை தலைவர் பரசுராமன் நன்றி கூறினார்.