லூர்தம்மாள் சைமன் 113- ஆவது பிறந்தநாள் விழா

குளச்சல்;

Update: 2025-09-27 02:56 GMT
தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் அவர்களின் 113-ஆவது பிறந்தநாள் விழா குளச்சல் பீச் சந்திப்பில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் ஸ்டார்வின் தலைமை தாங்கினார்.       நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்   குளச்சலில் உள்ள குமரி மாவட்ட  விசைப்படகு மீன்பிடிப்பவர்  நல சங்க வளாகத்தில் உள்ள லூர்தம்மாள் சைமன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதோடு குறைகளையும் கேட்டு தெரிந்து கொண்டார்.

Similar News