வாணியம்பாடி அருகே 12 ஆம் வகுப்பு படித்து மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது.

வாணியம்பாடி அருகே 12 ஆம் வகுப்பு படித்து மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது.;

Update: 2025-08-22 08:59 GMT
வாணியம்பாடி அருகே 12 ஆம் வகுப்பு படித்து மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது. ------------------------ திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் பகுதியில் 12 ஆம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்து வருவதாக வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகமுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறையினர் உடன் சென்று அங்கு விசாரணை செய்த போது திம்மாம்பேட்டை அடுத்த புல்லூர் கிராமத்தை சேர்ந்த அனுமுத்து(47) என்பவர் 12 ஆம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்தது. உடனடியாக அவர் பயன்படுத்தி வந்த மருந்துகளை பறிமுதல் செய்து அனுமுத்துவை பிடித்து அம்பலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.மேலும் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஞானசுந்தரி அளித்ததின் புகாரின் பேரில் அம்பலூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News