பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த 12 பேரின் வாரிசுதாரர்கள் மற்றும் காயமடைந்த 4 பேருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியை மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இரா
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த 12 பேரின் வாரிசுதாரர்கள் மற்றும் காயமடைந்த 4 பேருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியை மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன் வழங்கினார்*;
பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த 12 பேரின் வாரிசுதாரர்கள் மற்றும் காயமடைந்த 4 பேருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியை மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன் வழங்கினார் விருதுநகர் அருகே இ.குமாரலிங்கபுரத்தில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் பட்டாசு ஆலைவெடிவிபத்துகளில் உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன் கலந்து கொண்டு விருதுநகர் வட்டம் நாட்டார் மங்கலத்தில் கடந்த 29.1.2022 ல் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்து,விருதுநகர் வட்டம் மெட்டுக்குண்டு கிராமத்தில் கடந்த 7.6.2025 அன்று நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்து மற்றும் சாத்தூர் சின்னக்காமன்பட்டியில் கடந்த 1.7.2025 அன்று நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்து ஆகிய வெடிவிபத்துகளில் உயிரிழந்த 12 தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.மேலும் மேற்கண்ட விபத்துகளில் காயமடைந்த 4 தொழிலாளர்களுக்கு மொத்தம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் நிவாரணம் வழங்கினார்.பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் அச்சம்தவிழ்த்தான் கிராமத்தில் நீரில் மூழ்கி இறந்த சிறுவன் விஜயகுமாரின் தந்தையிடம் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.நிகழ்ச்சிக்கு பின் இ.குமாரலிங்காபுரம் கிராமத்தில் அமைந்துள்ள பி.எம் மித்ரா ஜவுளி பூங்காவிற்கு இடம் கொடுத்த நில உரிமையாளர்களுக்கு உரிய பணம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் உரிய ஆவணங்கள் இல்லாத இடத்திற்கு அரசு சார்பில் நீதிமன்றத்தில் செலுத்திய பணத்தை இடத்தின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் கோரும்போது அதற்கு அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படமாட்டாது என்றும் அமைச்சர் உறுதியளித்தார்